நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்தின் சீரிய திட்டங்களுள் ஆய்வாளர்களுக்கான தமிழ் உயராய்வு நிதிநல்கைத் திட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பண்டைய மரபுகளை மீட்டுருவாக்குவது, அழிவின் விளிம்பில் உள்ள தமிழ் மரபுக் கலைகளை ஆவணப்படுத்துவது, உலகளாவிய தமிழாய்வுகளை ஒருங்கிணைப்பது, புதிய ஆய்வு அணுகுமுறை மற்றும் முறையியலின் அடிப்படையில் ஆய்வுகளை மேம்படுத்துவது முதலானவை இத்திட்டத்தின் முதன்மையான நோக்கங்களாகும்.
உயராய்வுகள் சமூகத்திற்குப் பயன்தருவதாக அமைதல் வேண்டும். மாறுபட்ட அணுகுமுறைகளுடனும் புதிய முறையியலைக் கொண்டும் பின்வரும் அடிப்படைகளில் அமைந்திருத்தல் வேண்டும்.
இவ்வாண்டின் நிதிநல்கைக்குரிய ஆய்வுக் களங்களாவன.
இவை தவிர சிறப்புக்குரிய, பயன்தரும் பிற தலைப்பிலான ஆய்வுக்களங்களும் விண்ணப்பங்களின் அடிப்படையில் கருத்தில் கொள்ளப்படும்.
இவ்வாண்டின் உயராய்விற்கான நிதிநல்கையின் மொத்த மதிப்பு பத்து இலட்சம் ரூபாயாகும். ஆய்வின் தலைப்பு, ஆய்வுக்களம், ஆய்வின் தரம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இத்தொகை பின்வரும் முறைகளில் பகுத்து வழங்கப்படவுள்ளது. இப்பகுப்பு முறை வரப்பெறும் விண்ணப்பங்களின் தன்மைக்கேற்பவும் மாற்றி அமைக்கப்படும்.
ஆய்வுக்களங்கள் |
தொகை |
---|---|
முதுமுனைவர் பட்டம் அல்லது முனைவர் பட்டம் |
2,00,000 |
ஆய்வுக்கட்டுரைகள் |
2,00,000 |
நூல்கள் வெளியீடு – (ஆய்வு நூல் மற்றும் மொழிபெயர்ப்பு) | 1,50,000 |
பயணக்கட்டுரைகள்- (நாடளாவிய அல்லது உலகளாவிய) | 50,000 |
ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் (தமிழியல் சார்ந்தது) | 1,00,000 |
பதிவுகள் – நிழற்படங்கள் காணொளிகள் (தமிழியல் சார்ந்தது) | 1,00,000 |
நிகழ்வுகள் –தமிழியல் சார்ந்த கருத்தரங்குகள், நிகழ்வுகள் உள்ளிட்டவை. | 2,00,000 |
ஆய்வுத் தலைப்பு மற்றும் ஆய்வு எல்லைகளுக்கு ஏற்ப ஆய்வு மேற்கொள்ளும் காலம் வரையறுக்கப்பட்டு தவணை முறையில் நிதி வழங்கப்படும்.
ஆய்வாளர்கள் www.nmtrc.in என்ற இணையதளத்தின் வழி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முறையாக பதிவுசெய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இந்நிதிநல்கைக்கு விண்ணப்பிப்பதற்கான முழுமையான விவரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் 2020 அக்டோபர் மாதம் இறுதிக்குள் முறைப்படி வெளியிடப்படும்.
ஆய்வாளர்களின் விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு, ஏற்புடைய, தரமான ஆய்வுகள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும்.
© Copyrights Reserved Kumaraguru Institutions